இன்று இரவு சில பகுதிகளுக்கு 200 மி.மீ மழை வீழ்ச்சி!

Date:

நேற்று(13) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

காலி மாவட்டத்தில் ஹினிதுமவில் 190 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, தெற்கு, மேல், சப்ரகமுவ ,வடமத்திய, மத்திய மாகாணங்களில் மழையுடனான கால நிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் இரவு வேளையில் 200 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பலத்த மழை பெய்யும் போது சில பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...