இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றி,தொடர் பங்களாதேஷ் வசமானது!

Date:

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தனது ஆறாவது சதத்தை(120) பதிவு செய்தார்.தனஞ்சய டீ சில்வா 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும் , துடுப்பாட்டத்தில் மஹ்முதுல்லாஹ் 53 ஓட்டங்களையும், மொசாதிக் ஹுசைன் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கையின் பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 5 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் ரமேஷ் மென்டிஸ் தலா இவ்விரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகளை கொண்ட தொடரை பங்களாதேஷ் 2-1 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...