“எதிர்காலத்தில் எனது கிராமத்தை அபிவிருத்தி செய்வேன்” க.பொ.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்டரீதியில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள் தர்சிகா! 

Date:

​இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் தர்சிகா தெரிவித்தார்.​

தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலையும் கருத்தில் கொள்ளாது கல்விக்காக தந்தை கூலி தொழிலை மேற்கொண்டும் , தயார் ஆடுகள் வளர்த்தும் அதில் வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுகளையும் கவனித்து எஞ்சிய வருமானத்தில் கல்லவியை தொடர்ந்து இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தில் வணிகப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் 3A பெறுபேறுகளைப்பெற்று முதல் நிலை பெற்று சந்தோஷத்தில் பூரிப்படைந்து தனது கருத்துகளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான. கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டுவை. எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு பெறுபேறுகளை பெற்றதுடன் பெற்றோருக்கும் தனக்கு கற்பித்த ஆசிரியர், அதிபர், தனிியார் கல்வி நிலைய ஆசிரியர்களிற்கும் தனது இரு சகோதரர்களிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக வந்து எனது கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என வணிகப்பிரிவில் மாவட்த்தில் முதலிடம் பெற்ற கிளி/கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மகேந்திரம் தர்சிகா கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான. கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கோரக்கன்கட்டு வை. எம்.சி எனும் குக் கிராமத்தில் வசிக்கும் குறித்த மாணவியே இவ்வாறு பெறுபேறுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இந்த வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த எனது பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், தனியார் கல்விநிலைய ஆசிரியர்களையும் மற்றும் எனது இரண்டு அண்ணாக்களுக்கும் பெரு மகிழ்ச்சியுடன் நன்றிகளையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...