ரிஷாட் பதியுதீன் சிறந்த முஸ்லிமாக இருந்தவர், ஒருபோதும் தீவிரவாதி போன்று செயற்பட்டதில்லை என்பதை நான் நன்கறிவேன், என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்வீட்டர் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் எம்.பி கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன.
ரிஷாட் பதியுதீன் 1990 களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே, எனக்கு அறிமுகமானவர். இலங்கையின் மிகவும் மோசமான ஆட்சியின், பிழையான நிர்வாக செயல்முறை மற்றும் தடுமாற்றங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு, ரிஷாட் பதியுதீன் ஒரு பலிக்கடாவாக பயன்படுத்தப்படுகின்றார்”