ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

Date:

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா கமேனி, தனது நாட்டு மக்களின் மரியாதைக்குரிய தலைவர் மட்டுமல்ல, உலக வல்லரசுகளின் அநீதிகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பிய உலகளாவிய ரீதியிலான ஒரு சிறந்த தலைவராவார். அவரது மறைவு ஈரான் நாட்டிற்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு பேரிழப்பாகும்.”

மேலும், குறிப்பாக அண்மைக்காலங்களில் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக, அவரது தலைமையின் கீழ் ஈரானிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புகளையும் ஆதரவையும் நாம் மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறோம்.

அநீதிக்கு எதிராக அச்சமின்றித் தனது தேசத்தை வழிநடத்திய ஒரு மாபெரும் தலைவரை உலகம் இன்று இழந்து நிற்கிறது.

அவரது மறைவினால் துயருற்றிருக்கும் ஈரான் மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது சம்மேளனத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...