கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

Date:

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பிரதேசத்தில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தரைவழி தாக்குதல் மற்றும் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 43 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனர்களுடனான முழு அளவிலான யுத்தத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறுகின்ற மிக மோசமான மிகத்தீவிரமான தாக்குதல் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே முதல்தடவையாக பலஸ்தீன பிரதேசத்திலிருந்து ஹமாஸ் தலைமையிலான போராட்டக்குழுவினர்
கடுமையான பதில் தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடாமல் இஸ்ரேல் பாதுகாத்து வருகின்றது. இருப்பினும் இதுவரை 5 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஸா பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து உலகளாவிய மட்டத்தில்
எதிர்ப்புகளும் கிளம்பத் தொடங்கி இருக்கின்றன.

லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
நியூயோர்க் நகர ஆர்ப்பாட்டம்
நியூயோர்க் நகர ஆர்ப்பாட்டம்
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
கராச்சியில் ,டம்பெற்ற ஆர்ப்பாட்டம்
கராச்சியில் ,டம்பெற்ற ஆர்ப்பாட்டம்
லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
மொரோக்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
மொரோக்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு கட்டம்
துருக்கி ஆர்ப்பாட்டம்
துருக்கி ஆர்ப்பாட்டம்
சூடானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
சூடானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
பேரூட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
பேரூட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

ஆகிய பல இடங்களில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பாரிய அளவிலான மக்கள் தற்போதைய சுகாதார விதிமுறைகளை மீறி வீதிகளில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் திரண்டு தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் ஒரே நேரத்தில் மிகத்தீவிரமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற மையும் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...