காசாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் . தற்பாதுகாப்பு உரிமை பாலஸ்தீனர்களுக்கு இல்லையா ????

Date:

காசாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மூர்க்கத்தனமான கொடூரமான மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய தாக்குதல்கள் மூலம் 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இன்று காலை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டவர்களில் 41 பேர் பலஸ்தீன சிறுவர்கள் இந்த மக்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழும் உரிமை கிடையாதா என்ற கேள்விதான் இப்போது சர்வதேச அரங்கில் மேலோங்கி இருக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியும் அவரின் வழிகாட்டலில் செயற்படும் ஐரோப்பிய நாடுகளும் இந்த விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றமை பெரும் கவலைக்குரியதாகும்.

 

ஆனால் அவர்கள் இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அதே உரிமை பாலஸ்தீனர்களுக்கு கிடையாதா என்பதுதான் அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்ற முக்கிய கேள்வி. இந்த கேள்விக்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.

மாறாக பலஸ்தீனத்தை அவர்கள் கண்டித்து வருகின்றார்கள். பலஸ்தீனர்கள் நடத்திவரும் எதிர் தாக்குதலை பயங்கரவாதம் என்றும் வன்செயல் என்றும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அதை விட கொடூரமாக இஸ்ரேல் ஆரம்பித்த தாக்குதல் எந்த பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களிடம் உலகம் முன்வைத்து இருக்கின்ற பிரதான கேள்வி. இந்த கேள்விகளுக்கு விடை காண முடியாமல் மேற்குலகம் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கின்றது. இவர்களும் அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் அனைத்துமே ஒரு காலத்தில் மனித குலத்தை வாட்டி வதைத்தவை என்பதை உலகம் நன்கு அறியும் .

ஐரோப்பிய நாடுகள் ஆபிரிக்காவில் மேற்கொண்ட கொலை படலம் மற்றும் சித்திரவதை முகாம்கள் அந்த வதை முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பன பற்றி வரலாறு பேசிக் கொண்டிருக்கின்றது.

சுமார் 15 லட்சம் கிகியு இன கென்யா பொது மக்கள் கென்யாவில் பிரிட்டிஷ் படைகளால் நடத்தப்பட்ட வதை முகாமில் இருந்ததாகவும் அந்த முகாமுக்குள் மரணித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை என்றும் பிரபல வரலாற்றியலாளர் கரோலின் எல்கின்ஸ் எழுதியுள்ள Murderous Campaign என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஐரோப்பிய சக்திகளிடமிருந்து இன்று மட்டும் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும் என்ற ஆச்சரியம் இன்னமும் உலக மக்களிடம் உள்ளது. அது மட்டுமல்ல ஒரு காலத்தில் தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஏகாதிபத்தியவாதிகள் பயங்கரவாதம்

கொடுங்கோல் சித்திரவதை கொலை படலம் என்பனவற்றை அந்த நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தனர். இது தமக்குரிய தற்பாதுகாப்பு உரிமை என்று ஏகாதிபத்தியவாதிகள் மார்தட்டிக் கொண்டனர். ஆனால் அந்த கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு இலக்கம் 37/43 என்ற தீர்மானத்தை பலரும் மறந்து தான் இப்பொழுது பலஸ்தீனர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றனர். 1982 ஆம் ஆண்டு தீர்மானம் இலக்கம் 37 / 43 ன்படி சொல்லப்படுகின்ற விடயம் எந்த ஒரு தேசத்தின் மக்களும் தங்கள் மீது அநியாயங்கள் ஆக்கிரமிப்புகள் நிகழ்த்தப்படுகின்ற போது சுதந்திரம், ஆள்புல ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியம், ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை, வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை, வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை, என்பனவற்றுக்காக போராடும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் ஆயுதப் போராட்டமும் அடங்கும் என்று மிகத் தெளிவாக அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதை மறந்துவிட்டு இன்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலை மட்டும் ஆதரித்துக் கொண்டு பலஸ்தீனர்களை முற்றாக ஓரம்கட்டி அவர்களுடைய சுய போராட்டத்திற்கான சுய இருப்புக்கான உரிமையை மறந்து அவர்கள் நடத்தி வருகின்ற போராட்டத்தை கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கின்றமை மிகவும் கவலைக்குரியதாகும் .

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...