குண்டுவெடிப்பில் சிக்கி பலத்தகாயமடைந்துள்ள மாலைதீவின் முன்னாள் முகமட் நசீட் பல சத்திரகிசிச்சைகளிற்கு பின்னரும் ஆபத்தான நிலையில் உயிருக்காக போராடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த 16 மணித்தியாலங்களில் தலை உட்பட உடலின் பல பாகங்களில் சத்திரகிசிச்சை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மருத்துவமனை அவர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே காணப்படுகின்றார் எனதெரிவித்துள்ளது
முன்னாள் தனது வீட்டிற்கு வெளியே காரில் ஏறமுயன்றவேளை மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலைதீவு பொலிஸார் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளனர்.