கேரள சட்டசபைத் தேர்தல் 2021 : வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவாரா பினராயி விஜயன்?

Date:

 

பா. முகிலன்

 

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச் செய்வதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

 

கேரள சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியமைத்தால் அது சமீபத்திய கேரள அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு சரித்திர சாதனையாக இருக்கும் என்பதால், கருத்துக் கணிப்பு நிஜமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபைக்கு, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியும், காங்கிரஸ்

தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜக 3-வது அணியாகவும் களம் இறங்கின.

கேரளாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள் அம்மாநில மக்கள். ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச்

செய்வதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட

பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

இதன் எதிரொலியாக சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதே நிலை சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதையே உறுதிப்படுத்தின.

 

கேரளா சட்டசபைத் தேர்தல் 2021

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்பு நிஜமாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அப்படி கருத்துக்கணிப்பு நிஜமானால், அது வரலாற்றுச் சாதனையாகவே இருக்கும்!

நன்றி விகடன்

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...