நான் சொன்னதை கேட்கவில்லை! மரணத்திற்கு இதுவே காரணம் – திஸ்ஸ விதாரன ஆதங்கம்!

Date:

கொரோனா வைரஸ் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதற்கட்டத்தில் முழுமையாக செலுத்தியிருந்தால் கொரோனா தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவாகியிருக்காது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.

 

சுகாதார தரப்பினரதும், விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுகின்றமை கவலைக்குரியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர்ந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 

புதுவருட கொரோனா கொத்தணியை கட்டுப்படுத்த தற்போது காலம் தாழ்த்தப்பட்ட வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை செயற்படுத்தப்பட்டுள்ளன. புதுவருட காலத்தில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களும், விசேட வைத்தியர்களின் அறிவுறுத்தல்களும் முறையாக செயற்படுத்தப்பட்டிருந்தால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தோற்றம் பெற்றிருக்காது.

 

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட பொறிமுறையினை பாராளுமன்றினை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று வகுக்க வேண்டும்.

 

ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தங்களின் பிரதேச நிலவரம் குறித்து அதிக அக்கறை கொள்ள நாடாளுமன்றத்தின் ஊடாக சிறந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

 

கொரோனா முதலாம் அலைத்தாக்கத்தின் போது குறிப்பிட்டேன். இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான தேவை கிடையாது என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...