பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறையை எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டின் போலீஸ் அதிகாரிகளின் விடுமுறை முன்பு மே 11 ஆம் திகதி முதல் மே 31 வரை பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிவரை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.