மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு பிரதமர் அறிவிப்பு!

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய 26 மற்றும் 27 தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டியதுடன், சுப்பர் மார்க்கெட்களின் ஊடாக மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரல்

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில்...

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்: 7 மாகாணங்களில் எச்சரிக்கை மட்டத்தில் உஷ்ணம்

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...