ரயில் சேவையில்  புதிய மாற்றம்!

Date:

யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் நேற்று தெரிவித்தார்.

இரவு நேர தபால் ரயில் சேவையில் குறித்த உறங்கல் இருக்கை ஆசன வசதி கொண்ட மேலதிக பெட்டி இணைக்கப்பட்டு சேவை இடம்பெறவுள்ளன.

 

இந்த வசதியைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்,

இதேவேளை, தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவியபோது, அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து மீண்டும் 1 .15மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் 1 .37மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்புக்கு புறப்படும் நகர் சேர் கடுகதி ரயில் சேவை மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோல் தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...