வாழைச்சேனையில் பாரிய விபத்து!

Date:

மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன், 31 வயதுடைய டினேகா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து குறித்த நபர் நேற்று இரவு அவரது உறவினரான பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி காரில் பிரயாணித்துள்ளனர். இந்த நிலையில் வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பட்டை மீறி கார் வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அந்த பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு சென்று உயிரிழந்த நிலையில் இருவரையும் காரில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...