ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் பெயரிடப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இதனை அக் கட்சியின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி வென்றிறாத போதும் , மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் உறுப்புரிமை வழங்கப்பட்டது.எனினும் அதற்கான உறுப்பினர் யார் என்று இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.