தபால் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு உபகரணங்களை அரசாங்கம் வழங்கத் தவறினால் நாளை நள்ளிரவிலிருந்து தமது பணிகளில் இருந்து ஒதுங்கவுள்ளதாக ஐக்கிய தபால் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவிக்கையில், நாட்டிலுள்ள 26 ஆயிரம் தபால் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
அத்துடன் முககவசம் மற்றும் சனிடைசர் கூட வழங்கப்படவில்லை. இதனால் தபால் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாளாந்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும்வரை தபால் சேவையை ஒருவாரம் அல்லது இரண்டொரு தினங்களுக்கு நிறுத்துமாறு அரசிடம் நாம் கேட்டிருந்தோம். ஆனால் எமது கோரிக்கையை அரசாங்கம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.