அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வு

Date:

முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் நேற்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது.

முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப் படுத்தி வருகைத் தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவு படுத்தினர்.

முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை விசேட அம்சமாகும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ், எஸ்.எம்.எம்.முஷரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.நவ்ஃபீக், இஷான் ரஹுமான், ஃபைஸல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஃபர்சான் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...