கொரோணா வைரஸை உருவாக்கிய நாடு சீனா என்ற சந்தேகம் இன்னமும் பலர் மத்தியில் இருந்து வருகின்றது. அது சரியா பிழையா அந்தக் கூற்று உண்மையா பொய்யா என்ற வாதங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க கொரோணா உருவான நாடு சீனாதான் என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
சீனாவில் உருவான கொரோணா உலகம் முழுவதும் பரவி இன்று அதன் பரம வைரியான இந்தியாவை வாட்டி வதைத்து வருகின்றது. இந்தியாவுக்கு கொள்கையளவில் சீனா மட்டுமல்ல எதிரி பாகிஸ்தானும் ஒரு முக்கிய எதிரி நாடுதான். ஆனால் பாகிஸ்தான் முண்டியடித்துக் கொண்டு அதன் அனுதாபத்தை தெரிவித்துள்ளதோடு உதவிக்கரம் நீட்டவும் தயாராகியுள்ளது. அதே போல் இந்திய ஆட்சியாளர்களின் சிறுபான்மை விரோத கொள்கைகள் தெரிந்திருந்தும் கூட சவவூதி அரேபியா பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பல உதவிகளை அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கொரோணாவை உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சீனா அது எவ்வளவு கொடூர சிந்தனை கொண்டது என்பதை அதன் சமூக வலைதள பதிவு ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின்
உத்தியோகபூர்வ சமூகவலைத்தள தோடு தொடர்புடைய ஒரு சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. அன்மையில் சீனா விண்வெளியில் உள்ள
நிலையத்துக்கு புதிய விண் ஓடம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது. அந்தப் படத்தைப் போட்டு அதற்கு அருகில் இந்தியாவில் க 24 மணி நேரமாக தொடர்ந்து எரிந்து வரும் சவக்கிடங்கின் படத்தையும் வெளியிட்டு அதில்
சீனாவில் நெருப்பு எதற்காக எரிகின்றது இந்தியாவில் நெருப்பு எதற்காக எரிகின்றது என்ற துணியில் “Lighting a fire in China VS Lighting a fire in India” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது .இந்த விடயம் உலகளாவிய மட்டத்தில் பெரும் கண்டனத்தை எதிர்நோக்கிய நிலையில் அவசர அவசரமாக அந்தப் பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது .
சீனாவின் உத்தியோகபூர்வ கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்புடைய வலைதளம் ஒன்றில் வெளியான அந்தப் படத்தையும்
அதற்கான விளக்கத்தையும் தான்
இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். சீனாவின் மனிதாபிமானமற்ற கொடூர சிந்தனைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.