இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் பலி!

Date:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 401,078 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடள் ஒரே நாளில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 401,078 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 21,892,676 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 17,930,960 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 318,609 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 37,23,446 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 4,187 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 238,270 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 167,346,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...