இந்தியாவில் கொரோணாவின் மூன்றாவது அலை தாக்கத்தையும் தவிர்க்க முடியாது | விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Date:

இந்தியாவில் கொரோணா வைரஸ் தாக்கத்தில் இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மூன்றாவது அலைத் தாக்கம் ஒன்றும் தவிர்க்க முடியாததாகும் என்று அந்த நாட்டின் சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

நேற்று இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் நாலு லட்சத்து 12 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்குள் மரணங்களின் எண்ணிக்கையும் 3980 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனிடையே தொடர்ந்தும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பிரச்சினைகளை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கின்ற கொரோணா வைரஸ் ஆனது இரட்டை உருமாற்ற வீரியம் கொண்டது என்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிக மோசமான ஒரு வைரஸ் என்றும் ஒரே வைரசுக்குள் இருவகையான உருமாற்றங்கள் ஏற்படுவது இதன் உண்மை நிலை என்றும் அந்த நாட்டின் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது பரவி வரும் வேகத்தில் மூன்றாவது அலை தாக்கம் தவிர்க்க முடியாததாக மாறிவிடும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஆஸ்பத்திரி கட்டமைப்புக்கள் மேலும் சிதைவடைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...