இரண்டு மில்லியன் மக்களுக்கு ஒரு பீ.சீ.ஆர் இயந்திரம் எஞ்சியவைகள் எங்கே? –நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி!

Date:

கிழக்கு மாகணத்தில் இரண்டு மில்லியன் மக்களுக்கு ஒரு பீ.சீ.ஆர் இயந்திரம் மாத்திரமே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நான் இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்காக வருகை தந்துள்ளேன். நான் ஆரம்பத்தில் தடுப்பூசி ஏற்றுவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன். எனக்கு முப்பது வயதுதான் என்னை விட தடுப்பூசி ஏற்ற வேண்டிய நிறையப் பேர் உள்ளமையினால் நான் தடுப்பூசி ஏற்றுவதில் ஆர்வம் கொள்ளவில்லை.

என்றாலும் சில அமைச்சர்கள் தமக்கும் உறவினர்களுக்கும் வீட்டிற்கே அழைத்து தடுப்பூசி ஏற்றியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தேன். மேலும் நான் தினந்தோறும் சுமார் 100, 200 பேர்களை தினந்தோறும் சந்திக்கின்றேன். எனவே நான் தடுப்பூசி ஏற்றுவது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலும் கிழக்கு மாகணத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை பெறுபேறுகளை பெற முடியுமான ஒரேயொரு இயந்திரம் ஆய்வகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது.

மேலும் சுமார் 2000 மேற்பட்டோர் தமது பரிசோதனை முடிவுகளை பெறாமல் காத்திருக்கின்றனர். ஏனேனில் நாளொன்றுக்கு சுமார் 500 பெறுபேறுகளே பெற முடியும். இதனால் பீ.சீஆர் பரிசோதனை பெறுபேறுகளை பெற கிழக்கு மாகணத்தில் சுமார் ஐந்து தொடக்கம் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் தனிமைப்படுத்தினால் அதற்குள் இத்தொற்று சமூகப் பரவலாக மாறிவிடுகின்றது.

கொரோனா இடுகம நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற 1700 மில்லியனில் 105 மில்லியனே ஜனவரி 31 வரை செலவிடப்பட்டுள்ளது. அந்நிதி இலங்கைப் பொதுமக்களின் பங்களிப்பாகும்.

கிழக்கு மாகணத்திற்கு ஒரேயொரு இயந்திரம்தான் உள்ளது. அவ்வியந்திரத்தின் பெறுமதி 50 மில்லியன் என்றாலும் ஒவ்வொரு மாகணத்திற்கும் இயந்திரம் கொள்வனவு செய்ய 450 மில்லியனே செலவாகும். ஆனால் சுமார் 1500 மில்லியன் மீதி உள்ளது அப்பணங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...