இலங்கைக்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கிய ஹுவாவி நிறுவனம்

Date:

இன்று (31) ஹுவாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ´இடுகம´ சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.

இலங்கையில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹுவாவி நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு பிரதமர்  பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி இதன்போது ஹுவாவி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக இலங்கையில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தை கௌரவ பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.

மேலும்,சுமார் 10000 மாணவர்களை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் திறமையானவர்களாக மாற்றுவதே இந்த சமூக பொறுப்பணர்வு திட்டத்தின் நோக்கமாகும்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...