இலங்கையை வந்தடைந்தது 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

Date:

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்று (25) இரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள், இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிகளையும், ஐந்து மில்லியன் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனா இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புக் கொண்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...