இலங்கை அணிவீரர்களின் பீ .ஸீ .ஆர் பரிசோதனை வெளியானதால் போட்டி நடைபெறுகிறது!

Date:

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதனால் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி இருந்த நிலையில் சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதானவிற்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மூவருக்கும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களில் இருவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்ணான்டோவிற்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் போட்டியை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Popular

More like this
Related

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...