பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

Date:

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் நேற்றிரவு மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலத்தை 19 ஆவது தேசிய பாதுகாப்பு படைப்பிரிவின் சிப்பாய்கள் மீட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் ஏனைய 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொல்பிட்டிய பகுதியில் பெய்த பலத்த மழையினால் குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகவும்,  அச்சமயம் அவ்வீட்டில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நால்வரும் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்றும் பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...