இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உப தலைவராக கெளரவ பா.உ ரவூப் ஹக்கீம் தெரிவு!

Date:

இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை -அவுஸ்திரேலியா நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் புதிய செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முசம்மில், ஹெக்டர் அப்புஹாமி மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உப தலைவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ பொருளாளராகவும், வைத்தியகலாநிதி உப்புல் கலப்பதி பிரதி செயலாளராகவும் தெரிவாகினர்.

 

இலங்கை சமூகத்தைச் சேர்ந்த 170,000 பேர் அவுஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அதிகப்படியான பங்களிப்புக்களைச் செய்து வருவதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் சுட்டிக்காட்டினார். “நாம் தொலைதூரத்தில் உள்ள இரு கண்டங்களின் நண்பர்களாக இருந்தாலும், எமது மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக அவுஸ்திரேலியா உள்ளது.12,000ற்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதுடன், மேலும் பல மாணவர்கள் உங்கள் நாட்டில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விரும்புகின்றனர். எங்கள் மக்கள் மீது உங்கள் நாடு காண்பித்துவரும் அக்கறைக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...