2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே 5ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இப் பரீட்சை முடிவுகளை ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது எனினும் முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு கணக்கிடப்பட்ட z-scores மதிப்பெண்கள் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.இந் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதோடு செயல்முறை முடிந்ததும் முடிவுகளை மே மாதம் 5 அல்லது அதற்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
முடிவுகளின் பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.பரீட்சை முடிவுகளை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (www.doenets.lk ) பார்வையிடலாம்.