ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தின் பணிகள் இடைநிறுத்தம்!

Date:

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐக்கியமக்கள் சக்தியின் தலைமை அலுவலக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் பணியாளர்கள் தனிமைப்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயற்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்றிய நாடாளுமன்றின் இரண்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தின் கமரா காட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய பெரும்பாலான எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...