ஒண்டாரியோ சட்டமன்றத்தின் சட்டமூலம் 104 ற்கு இலங்கை எதிர்ப்பு !  

Date:

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10/05/2021) வெளிநாட்டு அமைச்சகத்தில் இடம்பெற்றது.

 

‘தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்’ தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06ஆந் திகதி தனிநபர் உறுப்பினர் சட்டமூலம் 104 ஐ நிறைவேற்றியமை குறித்து அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலைகளை அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கின்றமை கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக இலங்கையில் ‘இனப்படுகொலை’ நடந்திருப்பதை ஒன்ராறியோ சட்டமன்றம் கண்டறிந்திப்பதாக அமைச்சர் விளக்கினார்.

இந்த சட்டமூலத்திற்கான கௌரவ லெப்டினன்ட் ஆளுநரின் அரச அங்கீகாரத்தை நிறுத்துவதற்காக கனேடிய அரசாங்கத்தின் உடனடியான தலையீட்டிற்காக அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் இணைந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே, நல்லிணக்க செயன்முறை, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு சட்டமூலம் 104 ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் குறித்து விரிவாக விளக்கினார்.

பல முனைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் அளிக்கப்பட்ட ஆதரவுக்காக கனேடிய அரசாங்கத்துக்கு வெளிநாட்டு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, பரந்த அளவிலான இருதரப்பு விடயங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...

‘ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது’: ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று...

1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே...