1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

Date:

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே வீதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, இவ்வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்கீழ், வீதியிலுள்ள பாலங்கள் மற்றும் வீதி அமைப்பை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

ஒரு கொடவத்தை – அம்பதலே பிரதான வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள 3 பிரதான பாலங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இலக்கம் 2/3 களு பாலம் மற்றும் இலக்கம் 9/1 பாலம் ஆகியவற்றின் பணிகளை 2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இலக்கம் 4/1 பாலத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2027 மே மாதத்தில் நிறைவடையவுள்ளன.

சர்வதேச அபிவிருத்திக்கான ஓபெக் நிதியம் (OFID) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான சவூதி நிதியம் (SFD) ஆகியவை இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன. இந்த மூன்று பாலங்களுக்காகவும் 1,546 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை, அங்கொட, கல்வான மற்றும் அம்பதலே ஆகிய பிரதான சந்திகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் குறைந்த நேரத்தில் தமது இலக்குகளை அடைய வாய்ப்பு ஏற்படும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணியாக நடைமுறைப்படுத்தப்படும் இப் பாலங்கள் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை ELS நிர்மாண நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

7.7 கிலோமீற்றர் நீளம் கொண்ட ஒருகொடவத்தை – அம்பதலே பிரதான வீதியில் 08 பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அவற்றில் ஐந்து பாலங்களின் அபிவிருத்திப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்த 08 பாலங்களினதும் நிர்மாணப் பணிகளுக்காக 2.5 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. பாலங்கள் திட்டத்திற்கு இணையாக, பிரதான வீதியை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்வதற்காக 4.2 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பல்வேறு வெளிநாட்டு உதவித் திட்டப் பிரிவின் திட்டப் பணிப்பாளர் ஐ. கே. பத்தேகம தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!

நடப்பு ஆண்டில் நேற்று (12) வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...