இன்று (25) நள்ளிரவு முதல் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசி முறையை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமித் கொதிகாரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி திட்டம் ஆரம்பத்தில் முறையாக மேற் கொள்ளப்பட்டாலும், இப்போது அது முறைமைகளை மீறி செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.