கொட்டாவ, கடுவெல நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு!

Date:

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்கள் இன்று (14) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் பாராமரிப்பு மற்றும் நடவடிக்கை பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவிக்கையில் , கடுவெல பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 2 நுழைவாயில்களும் வெளியேறும் 02 நுழைவாயில்களும், கொட்டாவ பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 02 நுழைவாயில்களும், வெளியேறும் 2 நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளிலுள்ள நுழைவாயில்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...

உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!

-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய...