பிரிட்டனில் உருமாற்றம் பெற்றB1.1.7 கொரோணா வைரஸே தற்போது இலங்கையில் வேகமாக பரவி வருகின்றது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரதான ஆய்வாளர் பேராசிரியர் சந்திம ஜீவன்தர உறுதி செய்துள்ளார்.
இதன்படி
மெதிரிகிரிய, காலி,ஹிக்கடுவ, வவுனியா, களுத்துறை குருநாகல் கொழும்பு கம்பஹா ஆகிய இடங்களில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணாவைரஸ் இந்த வகையை சார்ந்தது என்று அவர் உறுதி செய்துள்ளார்.
இது முன்னைய கொரோணா வைரஸை விட பரவல் வேகம் 50 வீதம் அதிகம் ஆனது என்றும், அதேபோல் முன்னையதைவிட 55 வீதம் அதிகமான மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினை ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளர்களுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை என்று சுகாதாரத் துறையை சேர்ந்த
பிரதிப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்துப்படி கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கை 12 ஆயிரத்து 789
ஆக உள்ளது
நேற்றுவரை இந்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 504 படுக்கைகளை
ஆக்கிரமிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை காரணமாக பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அதுமட்டுமன்றி கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா பரவல் வேகம் நாட்டின் பல்வேறு இடங்களில் மிகவும் தீவிரம் அடைந்து வருவதால் ஒரு அனர்த்த நெருக்கடி நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகும் என்றும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்