இலங்கையில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் 2,325 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1298 ஆகும்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாலிஎல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 20 வயதுடைய பெண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதியில் ஒட்சிசனின் அளவு குறைவடைந்தமையால் இதயமும் நுரையீரலும் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.