கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு – அரசாங்கத்தின் நிலைப்பாடு!

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ள தீர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உடன்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக் கொள்ள கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

குறித்த சரத்துக்களை திருத்தம் செய்ய வேண்டிய முறை தொடர்பிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு 62 பக்கங்களை கொண்டிருந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் த சில்வா ஆகியோரினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...