கொவிட் தொற்றின் பரவலில் இலங்கையின் நிலையை , இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் 1600ற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . அத்தோடு இந் நிலை குறித்து மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதாகவும், தற்போது அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் அண்மையில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் பகுதிகளுக்கு சென்றிருந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக மேலும் வைத்தியர் குறிப்பிட்டார்.
Thanks for the update.