திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விளாங்குளம்,முத்து நகர் மற்றும் இடிமண் ஆகிய பிரதேசங்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதி தவிசாளர் எம்.நெளபர் தலைமையில் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஸன பாண்டி கோரலவின் பங்கேற்புடன் சுமார் 600 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இதன் போது இலங்கைக்கான சவூதி தூதுவரகத்தின் சிரேஷ்ட்ட கணக்காளர் கலாநிதி அப்துல் அஸீஸ் கலந்து கொண்டு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இதற்கான நிதியுதவியினை பல்கேரியா நாட்டின் இஸ்மாயில் பிஸ்லூ தொண்டு நிறுவனம் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.