சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி தலையீடு செய்தாரா? | உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

Date:

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலையீடு செய்ததாக வெளியான தகவலை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு பொதுவாக மூன்று மாதங்கள் செல்லும். இது தடுப்பூசி உருவாக்குநர்கள் சமர்ப்பித்த தரவின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அமையும். இதனால் ஒப்புதலுக்கு அதிக காலம் எடுக்கும்.

ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு, ஒப்புதல் அளித்ததற்கான பெருமையை இலங்கை தம்வசப்படுத்தியிருந்தது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்துரையாடியதன் விளைவாகவே சீனாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ‘zoom’ மூலம் உலக சுகாதார அமைப்பின் இயக்குநருடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அதே மாலையில் சினோபார்ம் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று , ரத்நாயக்க கூறியிருந்தார்.

எனினும் உள்நாட்டு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்கள் நாடுகளின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன, ஆனால் அவை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல என்று அந்த அமைப்பு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...