தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!

Date:

குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹபுவிட கிராம சேவகர் பிரிவு.

கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவின் திப்புட்ட கிராம் மற்றும் கொஸ்கஸ்தென்ன கிராமம்.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற...

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...

2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன்...