தேசிய ரீதியாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இந்த தீர்மானித்தை, இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு ஏகமனதாக மேற்கொண்டது.
பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், தற்போது அந்த தேசியப் பட்டியலுக்கான உறுப்பினரை கட்சி தெரிவு செய்துள்ளது.
மேலும், ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடும் ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.