ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வராமை தொடர்பில் எதிர் கட்சி உறுப்பினர்களான சரத் பொன்சேக, முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரிக்கார் ஆகியோரும் தமது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்
சரத் பொன்சேக தெரிவிக்கையில்,
ரிஷாத் பதியுதீன் என்பவர் பொதுமக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கென கௌரவமொன்று இருக்கின்றது.
குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் வைப்பதனால் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்தாகும் எனின் இச் சட்டத்தினால் பயனில்லை. என்றார்.
மேலும் இது தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடுகையில்,
கடந்த திங்கட்கிழமை மாலை ரிஷாத் பதியுதீனிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றாலும் இதுவரை அதன் முடிவுகளை அறிவிக்கவில்லை. மேலும் அவர் கொரோனா தடுப்பூசியும் ஏற்றியுள்ளார்.
இவ்வாறு அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று கட்டளையிடும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கு இல்லை.
இது தொடர்பில் ஹர்சா டி செல்வா தெரிவிக்கையில்,
நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாக அமைச்சர் ஒருவருக்கு செயற்பட முடியாது. சட்டம் உருவாக்கும் இடம் என்ற அடிப்படையில் சட்டமூலத்தை சமர்பித்து அரசியலமைப்பை மாற்றலாம்.
மரிக்கார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ரிஷாத் தொடர்பில் ஊழல் மோசடி தொடர்பில்தான் விசாரணை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு அறிக்கையில் அது தொடர்பில் விசாரிப்பதில் பிரச்சினையில்ல. அவரும் தொடர்பு எனின் வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைக்கவும். ஆனால் அதற்காக அமைச்சர்களுக்குள்ள வரப்பிரசாதங்களை பாதுகாப்பு அமைச்சருக்கு தேவையான விதத்தில் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் பதிலளிக்கையில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என கோரிக்கை முன்வைத்தேன். நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியது நான்தான் சரத் பொன்சேக அல்ல. மேலும் சரத் பொன்சேக அவர்களுக்கு மக்கள் பாதுகாப்பு தொடர்பில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். எனவே பாராளுமன்றத்திற்கு அழைக்க வேண்டாம் என சபாநாயகரிடம் கேட்கிறேன்.
மேலும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு தமக்கு விரும்பியவாரெல்லாம் கைது செய்ய முடியாது என குறிப்பிட்டார்.