சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணரத்ன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் மே 31 வரை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார். இது நபரின் தேசிய அடையாள அட்டை எண்ணின் கடைசி இலக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அடடையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 15 நெருங்கிய உறவினர்களின் பங்களிப்புடன் திருமண பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.