நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் செயற்பாடுகள் மே மாதம் 3ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட தாக அமையும் என்று நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரம் வழக்குகளின் போது சந்தேகநபர்கள் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றங்களுக்கு நேரடியாக வர வேண்டிய தேவை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .