பங்களாதேஷ் பயணமாகியுள்ள இலங்கை குழாமைச் சேர்ந்த மூவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணி வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அக்குழாமில் இணைந்துள்ள பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.