பயணக் கட்டுப்பாடு விதிகள் – 22,000 பொலிஸார் கண்காணிப்பில்!

Date:

நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்காலப் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.

அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப் பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...