இன்று (11) நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் புகையிரத சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.