புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வுகள்!

Date:

கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி நாடு தழுவிய பிரார்த்தனையின் ஓர் அங்கமாக புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் பிரார்த்தனை நிகழ்வுகள் சனிக்கிழமை (08) மாலை  05.46 தொடக்கம் இடம்பெற்றது.

 

கொவிட் 19 தொற்றிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க விஷேட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

பெரிய பள்ளியின் பிரதம பேஷ் இமாம்களான அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.சிஹான், அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஜெஸ்கான் ஆகியோர் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை பேணி இந்நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.

உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்று நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர, உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டி சர்வமத பிரார்த்தனையை ஒரே நேரத்தில் சனியன்று மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கையிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரூசி சனூன் புத்தளம்

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...