கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மீதே இனம் தெரியாத ஒரு நபர் தாக்குதல் நடத்தி உள்ளார். குறிப்பிட்ட இந்த பெண் அதிகாரி அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை விநியோகம் செய்துவிட்டு தனது வீடு நோக்கி திரும்பி கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரைத் தாக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவரை தேடி பொலிசார் இப்பொழுது தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .