மலேஷியா அறிமுகம் செய்துள்ள பிரயாண தடை

Date:

இலங்கை உட்பட சில நாடுகள் மீது மலேஷியா இன்று முதல் பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. கொரோணா வைரஸ் கடந்த வாரங்களில் வேகமாக பரவத் தொடங்கி உள்ள நாடுகளுக்கே மலேசியா இந்த பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. மலேஷிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் இன்று முதல் பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை நேபாளம் ஆகிய நாடுகளின் பிரஜைகள் மலேசியாவுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவும் கொரோணா பரவல் காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்
தனது பிரஜைகளையும் நாட்டையும் காப்பாற்றும் நோக்கில் இந்த பிரயாண தடை தவிர்க்கமுடியாமல் அமுல் செய்யப்படுவதாக மலேஷியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு...

நாட்டில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...