குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

Date:

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்; இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

இதனால் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உட்பட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, தெரிவு செய்யப்பட்ட சமூக அடிப்படையிலான ஊட்டச்சத்துத் திட்டங்களுக்கான அணுகலை அதிகரிக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலக வங்கி குழுமத்தின் ஜப்பான் சமூக அபிவிருத்தி நிதியத்திலிருந்து வழங்கப்படும் 2.73 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் கீழ், அந்த மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு தாய் மற்றும் குழந்தை பருவ ஊட்டச்சத்து சேவைகள் திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர்...